Wednesday 26 December 2012

நிறைவுரை


அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்களும்,நன்றியும்.
என்னுள் பல ஆண்டுகளாக உறங்கி கிடந்த எழுத்து உணர்வுகள்
என் blogspot வழியாக பகிர்ந்தேன்.
                    தற்போது மீண்டும் என் உணர்வுகளை முடமாக்கி,
                                 மௌனமாக்க முடிவு செய்துள்ளேன்.
                                        ஆதலால் இந்த நிறைவுரை.

வலி எல்லோருக்கும் பொது.
அதை அவரவர் தாங்கிக்கொள்ளும்
தன்மையை பொருத்து மாறுபடுகிறது.
என் வாழ்க்கை என்னும் பரமபரத்தில் ஏணிகள் மிகவும் குறைவு.
பாம்புகளே அதிகம்.
தாயம் போட்டு ஒரு கட்டம் முன்னேறினால்
கடும் ............  கொண்ட பாம்புகள் கொத்தி மீண்டும் கீழே கொண்டு
செல்கின்றன.
எத்தனை தாயத்து கட்டினாலும்,
தாயம் விழும் போதுதான் விழும்.
கடும் வலியை தாங்க உணர்வுகளை முடமாகினால்,

                                    வலி பல மடங்கு அதிகரிக்கும்.

இதனால் ஞானம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பிரியாவிடை.

                முடிந்தவரை பார்வை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்.

நான்(!) blogspot களில் உலா வந்த போது என் மனதை தொட்ட
இரண்டு வலைத்தளங்களை பற்றி
தற்போது அவசியம் விமர்சிக்க மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

முதலாவது:

http://kovaikkavi.wordpress.com/ வேதாவின் வலை.
சகோதரியின் கருத்துமிக்க கவிதை (இலக்கிய) உணர்வுகள் எண்ணில் அடங்காதவை.
அவரின் பொறுப்புமிக்க பதில் மதிப்பு மிக்கவை.  
அவரின் விமர்சனம் பாமரனையும் பரமனாக்கும்.
அவரின் வலை படிக்க எனக்கு பாக்கியம் கிடைத்ததில் நான் புண்ணியம் செய்ததின் பலன்.
பல்லாண்டு வாழியவே,அவரும் அவரின் குடும்பத்தாரும்.

இரண்டாவது:

http://thmalathi.blogspot.in/.
இந்த சகோதரி ஒரு தமிழ்ப்பெண் என்பதில் எனக்கு மிகவும் பெருமையே.
நான் என் நண்பர்களிடம் இவரைப்பற்றி கூறும்போது
இவர் எழுத்துக்கள் நெருப்பாக பற்றி எரியும்,
இவர் பேனா எடுத்து இவர் பெயரை ஒரு பேப்பரில் எழுதினால் அந்த எழுத்துக்கள் நெருப்பாக பற்றி எரியும் என விமர்சித்ததுண்டு.
கவிதைநடை (எழுத்துநடை) மயில் இறகால் வருடும்.
கோபப்பட்டு வரும் வார்த்தைகள் தீக்கனலாய் கொழுந்துவிட்டு  எரியும்.
தற்போது மங்கள நாண் நோக்கும் எந்தன் சகோதரி,பின்வரும் நாளில் குழந்தைகளின் மழலைகளையும்,அதன் குறும்புகளையும் தாலாட்டாய்
செதுக்கும்போது
தென்றலோடு பனிக்காற்றும் கலந்து வரும்.
அப்போது அனைவரின் விமர்சனமும்,
"தீர்க்கசுமங்கலி பவ", "அஷ்ட ஐய்ஸ்வரியமும் பெற்று பல்லாண்டு வாழ்க" என்பதே ஒரு மனதாய் இருக்கும்.  
இருவரின் எழுத்துக்களும் காலத்தால் அழியாத தாக்கத்தை ஏற்படுத்துபவை.

                                இருவர் வலைகளும் மிகவும் சிறப்புமிக்கவை.

இருவரின் எழுத்துக்களும் என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.
என் வலைதளத்திற்கு வருகைபுரிந்த அனைவருக்கும், விமர்சித்தவர்களுக்கும் என் நன்றியை சமர்பிக்கிறேன்.
நன்றி.  
           

1 comment :

மாலதி said...

அன்பு உள்ளமே பணிவாய் வணங்குகிறேன் உங்கள் போன்றோரின் வாழ்த்து களினாலும் விமர்சனங்களினாலும் வளர்ந்தவள் என்ற செருக்கு எனக்குண்டு ... அருள் கூர்ந்து நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் இந்த பதிவு உலகத்தில் ராஜாளிப் பறவையாய் உயர உயர விண்ணை முட்டும் அளவிற்கு பறக்க வேண்டும் அருள் கூர்ந்து தொடருங்கள் ...... பணிவுடன்
மாலதி